முகப்புகோலிவுட்

விக்ரம் 58 திரைப்படத்துக்கு இதுதான் டைட்டிலா..?

  | November 30, 2019 21:29 IST
Vikarm 58

துனுக்குகள்

  • விக்ரம் 58 படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
  • இப்படத்தில் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் நடித்துள்ளார்.
விகரம் 58 திரைப்படத்துக்கு அமர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம் 28 என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் பட கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைகோ 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிவருகிறது.
விக்ரம் 58-ன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது இப்படத்துக்கு அமர் எனத்  தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் பெயர் அமர் என்பதாக இருக்கலாம் என பேசப்படுகிறது. இந்த தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்