முகப்புகோலிவுட்

ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி குழந்தையின் பெயர் ‘அன்வி’ தானா..?

  | May 16, 2020 13:29 IST
Gv Prakash

இருப்பினும், ஜி.வி. பிரகாஷ் அதே பெயரை அறிவிப்பார்களா இல்லையா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதி கடந்த ஏப்ரல் 20 அன்று தங்கள் முதல் குழந்தையான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அதையடுத்து இந்த நட்சத்திர தமபதிக்கு சமூக ஊடகங்களில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை அள்ளித் தெளித்தனர். மேலும், குழந்தையின் பெயரை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், நடிகர் மற்றும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கணேஷ் வெங்கறாம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவி, முழந்தையுடன் சைந்தவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “சைந்தவி பிரகாஷ், உங்கள் டார்லிங் இளவரசி ANVI-ஐ பார்ப்பதற்கு லாக் டவுன் முடியும்வரை காத்திருக்க முடியாது... இப்போது ஒரு பெரிய அரவணைப்பையும் டன் முத்தங்களையும் குட்டி பொண்ணுக்கு அனுப்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து, உடனடியாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்களில் குழந்தையின் பெயரை உறுதிப்படுத்தும்படி கேட்டனர்.

தன்னை அறியாமல் பெயரை வெளியிட்டுவிட்டார் என்பதை உணர்ந்த கணேஷ் விரைவில் தனது பதிவில் ‘AVNI' எனும் பெயரை மட்டும் நீக்கினார். ஆனால் அந்த நேரத்தில், குழந்தைக்கு அன்வி என்று பெயரிடப்பட்டது என்ற முடிவுக்கு நெட்டிசன்கள் வந்திருந்தனர். இருப்பினும், ஜி.வி மற்றும் சைந்தவி ஆகியோர் தங்கள் அன்பான மகளின் பெயரை, அதே பெயரில் அறிவிப்பார்களா இல்லையா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com