முகப்புகோலிவுட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘உலக நாயகன்’.!! தலைப்பு இது தானா.??

  | September 16, 2020 12:51 IST
Kamal Haasan

மாலை வரவுள்ள அறிவிப்பு கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் ‘மாஸ்டர்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த திட்டத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அவரது புதிய படம் அவரது சினிமா முன்னோடி ‘உலக நாயகன்' கமல் ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டிருக்கும் என்பது நீண்ட காலமாக ஒரு சலசலப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது, அவர் அறிக்கப்படவுள்ள திரைப்படம் நிச்சயம் கமலுடன் இருக்கவே வாய்ப்பிருப்பதாகவும், இந்த படத்திற்கு ‘எவ்னென்று நினைத்தாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு கமலின் ‘விஸ்வரூபம்' படத்தின் பிரபலமான பாடலின் தொடக்க வரியாகும்.

மேலும், இந்த புதிய படம் கடினமான அரசியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உன்மையாகிறதா அல்லது தகவலாகவே சென்று கடந்துவிடுகிறதா என்பது மாலை மணிக்கு தெளிவாகிவிடும்.

கமல்ஹாசனைப் போற்றுவதில் லோகேஷ் மிகவும் பகிரங்கமாக இருந்து வருகிறார், மேலும் அவர் ஒரு பெரிய கமல் ரசிகர் என்று அடிக்கடி ஒப்புக்கொண்டுள்ளார். கைதி திரைப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் ‘விருமாண்டி' கமலின் பட கதாபாத்திரத்தின் தாக்கம் என்பதையும், சந்தீப் கிஷனுடன் அவரது முதல் படமான ‘மாநகரம்' படத்திலும் கமலின் ‘சத்யா' கதாபாத்திரத்தின் நிழல்கள் உள்ளன என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போது அறிவிக்கவுள்ள படத்துக்கு கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com