முகப்புகோலிவுட்

‘கனா’ ஹிந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்.??

  | June 25, 2020 16:02 IST
Kanaa

2018 டிசம்பர் 21-ஆம் தேதி வெளியான 'கனா' ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மிகப் பெரிய ஹிட் ஆனது.

பாடலாசிரியராகவும், பாடகராகவும் காமெடி நடிகராகவும் வலம்வந்த அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அவதாரம் எடுத்த திரைப்படம் ‘கனா'. பெண்கள் கிரிகெட் விளையாட்டையும், விவசாயத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘கோலிவுட் ப்ரின்ஸ்' சிவகார்த்திகேயன் தனது SK Productions பேனரின் கீழ் தயாரித்தார். 2018 டிசம்பர் 21-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மிகப் பெரிய ஹிட் ஆனது. அதையடுத்து கடந்த ஆண்டு, இப்படம் தெலுங்கில் ரீமேக் சேய்யப்பட்டு கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற தலைப்பில் வெளியானது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதேபோல், அப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமானார்.

ild5sv78

இப்போது, இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதன் மூலம், சிவகார்த்திஏயன் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகை சயாமி கேர் ‘சோக்ட்' படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயன் பாராட்டியதை தொடர்ந்து ‘கனா' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த யூகங்கள் தொடங்கியது. மேலும், சயாமி கேரை ஒரு கிரிக்கெட் படத்தில் பார்க்க ஆர்வமாக உள்ளதாக, சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியதும், பதிலுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது கிரிக்கெட் படம் குறித்து உறுதிப்படுத்தினார்.

ஆனால் அவர்கள் 'கனா'வின் இந்தி ரீமேக் குறித்து பேசினார்களா அல்லது வேறொரு கிரிக்கெட் படம் பற்றி பேசினார்களா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் சிவகார்த்திகேயன் தனது பாலிவுட் நுழைவு செய்வாரா என்பது ரசிகர்களிடையே பெரிய கேள்வி உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com