முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனுக்கு முதல் படம் ‘மெரினா’ இல்லயா.!! பல உண்மைகளை உடைத்த பெண் இயக்குநர்..!

  | April 14, 2020 11:56 IST
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது ‘அயலான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக பி.எச் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது, ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்', நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். தற்போது, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஒருவராக, கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில், இப்போது அவரது அறிமுகத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு?' காமெடி நிகழ்ச்சியின் வெற்றியாளராக தொடங்கி, பல நிகச்சிகளை தொகுத்துவழங்கி, தனது தனித்திறமையினால் மக்களின் மனதில் நீங்காத இடம் பிட்த்த வி.ஜே சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜன் இயக்கத்தில் வெளியான ‘மெரினா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதற்கு முன்னதாகவே, நடிகை - இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘குறள் 786' என்ற வெளிவராத திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அபிநயா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த சுவாரஸ்யமான உண்மையை லட்சுமி ராமகிருஷ்ணன் நேற்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 2010-ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான ‘குறள் 786' திரைப்படத்தின் ட்ரைலரை பகிர்ந்து “இந்த குறும்படம் எப்போது வெளியாகும்.?” என ரசிகர் ஒருவர் கேட்டதையடுத்து இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். அதில் "குறும்படம் அல்ல! இது தான் சிவகார்த்திகேயனை வைத்து நான் இயக்கவிருந்த முதல் படம், நான் தான் அவரை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இந்த திட்டத்தை கைவிட்டதை அடுத்து மெரினாவில் நடித்தார்” எனக் கூறியிருந்தார். 
மேலும், அபிநயா கதாநாயகியாக நடிக்கவிருந்தார். நான் அவளுடன் வேலை செய்ய விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் ‘குறள் 786' செய்யவேண்டும்” என்றும் நேற்று பதிவிட்டிருந்தார். இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்க மிகவும் வைரலானது.

இந்நிலையில், இன்று காலை இது குறித்த மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “சிவகார்த்திகேயனுடனான இந்த சிறு பூசல் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே மறந்துவிட்டது. அவரை மிகவும் வெற்றிகரமாக பார்ப்பதில் மகிழ்ச்சி. அவர் இப்போது இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றது அவரது திறமைகள் மட்டுமே. அவர் என்னை அறியாதது போல் அவர் பேசியபோது நான் வருத்தப்பட்டேன்!, ‘குறள் 786' படத்திற்காக அவர் என்னுடன் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்தார். அவர் என் குடும்ப உறுப்பினரைப் போல இருந்தார்!” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த ட்வீட்டும் செம வைரலாகிவருகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com