முகப்புகோலிவுட்

அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் பட ரீமேக்கில் ‘மெகா ஸ்டார்’.? அதுக்கு தான் இந்த நியூ லுக்கா.!!

  | September 11, 2020 18:27 IST
Vedalam

சிரஞ்சீவி நேற்று மாலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் தனது புது கெட்டப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘தல' அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘வேதாளம்'. இப்படத்தில், லகக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், தம்பி ராமய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் தற்போது தெலுங்கி ரீமேக்  செய்யப்படவுள்ளது. இதில் டோலிவுட் ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, அஜித்தின் ‘வேதாளம்' கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவி நேற்று மாலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் தனது புது கெட்டப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த புதிய லுக் எதற்காக என்று தெரிவிக்கப்படவில்லை.

#UrbanMonk Can I think like a monk?

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

இப்போது சமீபத்திய சுவாரியமான தகவல் என்னவென்றால், ‘மெகா ஸ்டார்' வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவே இந்த புதிய கெட்டப்பில் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்போம்.

முன்னதாக, ‘தல' அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘கட்டமராயுடு' திரைப்படத்தில் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடித்திருந்தார். வேதாளம் திரைப்படத்தில் ரீமேக்கிலும் பவன் கல்யாண் நடிப்பார் என்று முன்னதாகக் கூறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com