முகப்புகோலிவுட்

'தளபதி 64' படத்தில் நடிகர் சாந்தனு?

  | October 01, 2019 16:40 IST
Thalapathy 64

நடிகர் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் தகவல்!

துனுக்குகள்

  • கைதி திரைப்படம் பிகில் படத்துடன் வெளியாகிறது
  • விஜய்சேதுபதி இந்த படத்தில் இணைந்துள்ளார்
  • சாந்தகு தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படத்தில் சாந்தனு இணைந்துள்ளதாக தகவல்.
 
அட்லியின் பிகில் படத்தை அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு ‘தளபதி64' என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் 64 படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் இணையும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தர்பார் படத்தை அடுத்து அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதனை அடுத்து இரண்டாவது முறையாக விஜய் படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்திருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், நடிகர் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்