முகப்புகோலிவுட்

தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா சூர்யா? வைரலாகும் புகைப்படங்கள்!

  | September 26, 2019 18:08 IST
Suriya

துனுக்குகள்

  • காப்பான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
  • சூர்யா புதிய கல்விகொள்கை பற்றி கூறிய கருத்து விவாதப்பொருளானது
  • சூரரை போற்று படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருகிறது
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா சமூகம் சார்ந்து முக்கிய பிரச்னைகளை பேசும் படங்களிலும் நடித்து வருகிறார்.
 
செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் ஒரு அரசியல் சூழ்ச்சிகளை விவரிக்கும் படமாக அமைந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
 
இதையடுத்து சுதா கொங்காரா இயக்கும் சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சூர்யா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது. மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சூர்யாவின் நண்பரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்