முகப்புகோலிவுட்

ரஜினியை வீட்டிற்கே சென்று சந்தித்த லோகேஷ் கனகராஜ்..! தலைவர் 169 கதை ரெடியா..?

  | December 04, 2019 12:52 IST
Rajinikanth

துனுக்குகள்

 • ரஜினியின் தர்பார் திரைப்படம் வரும் ஜனவர்-9 வெளியாகிறது
 • தலைவர் 168 திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.
 • லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் தளபதி 64 படத்தை இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் ஏன் ரஜினிகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

‘கைதி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடந்த திங்கட்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில்  சந்தித்தார். இச்செய்தி வெளிவந்ததை அடுத்து கோலிவுட் வட்டாரமே பரபரப்பான நிலையில் உள்ளது. இந்த சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்ததாகவும், இருவரும் சேர்ந்து புதிய படம் பற்றி விவாதித்திருக்கலாம் என்றும் பேசப்பட்டுவருகிறது. இந்த இளம் இயக்குனரின் முதல் படமான ‘மாநகரம்' 2017-ஆம் ஆண்டில் வெளியான போது, படத்தைப் பார்த்த ரஜினி உடனடியாக அவரை அழைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்' திரைப்படம் 2020  பொங்கல் வெளியீட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. மேலும், இம்மாத இறுதியில் சிறுதாய் சிவாவின் இயக்கத்தின் அவர் நடிக்கவுள்ள தலைவர் 168 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘தளபதி 64' படத்தில் பிஸியாக உள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த கோடைகால விருந்தாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் சூர்யா, கார்த்தி மற்றும் கமல்ஹாசனுடன் படங்களை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி-லோகேஷ் கனகராஜின் இந்த சந்திப்பு ஒரு சாதாரண நிகழ்வா அல்லது மற்றொரு வித்தியாசமான படம் உருவாவத்ற்கான முன்னெடுப்பா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால், தற்போதைய தகவளின்படி, ரஜினி தனது பிறந்த நாளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் முன்கூட்டியே கொண்டாடியதாகவும், அதில் லோகேஷ் கனகராஜும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com