முகப்புகோலிவுட்

“பிகில்” திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகவில்லையா? அப்படியானால் எப்போது ரிலீஸ்?

  | August 19, 2019 11:54 IST
Bigil

துனுக்குகள்

  • அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம் இது
  • இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார்
  • கதிர் இப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருக்கிறார்
விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் தீபாளிக்கு முன்பே வெளியாகலாம் என செய்தி வெளியாகி இருக்கிறது.
 
தெறி, மெர்சல் படங்களை அடுத்து விஜய்- அட்லி இருவரும் மூனறாவது மறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘பிகில்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இவர்களுடன்  யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், கதிர் இன்னும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
சென்னை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த ‘பிகில்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனை அடுத்து இப்படத்தை வினம்பரப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இது தவிற டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தை இந்தாண்டு தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. தற்போது அக்டோபர் 24ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 24ம் வியாழன் கிழமை என்பதால் தொடர்ந்து மூன்றுநாள் விடுமுறை என்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெறிவிக்கின்றன.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்