முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி-அனுஷ்கா கூட்டணியில் புதிய திட்டமா.? தெளிவுபடுத்திய தயாரிப்பாளர்…

  | July 27, 2020 19:33 IST
Isari Ganesh

இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குவார் என்றும் தகவல் இருந்தது..

‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஏ.எல்.விஜய் இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி யிருப்பதாகவும், அப்படத்தின் மூலம் அனுஷ்கா முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரவுள்ளார் என்றும் சமீபத்தில் சில தகவல்கள் பரவின.

இந்த மாறுபட்ட கூட்டணியில் ஒரு படம் வருவதை விரும்பிய ரசிகர்கள், அதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுக்காக எதிர்பார்த்த நிலையில், இப்போது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் உறிமையாளர் ஐசரி கனேஷ் இந்த தகவல் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா கூட்டணியில் எந்த படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அனுஷ்கா தற்போது, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்' எனும் பன்மொழி திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாதவன், அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படமான ‘மாஸ்டர்' வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவாசாய், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற பல படங்களிலும் மற்றும் பிற மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com