முகப்புகோலிவுட்

‘சக்ரா’ பட வெளியீட்டில் சிக்கல்; விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

  | September 22, 2020 20:26 IST
Vishal

விஷால் இழப்புக்களுக்கு போதுமான ஈடுசெய்யும் வரை திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்ய நீதிமன்றத்தில் நிறுவனம் முறையிட்டது.

விஷாலின் வரவிருக்கும் திரைப்படமான சக்ராவை OTT தளங்களில் வெளியிடுவதைத் தடுக்குமாறு தயாரிப்பு நிறுவனமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக, வரும் வியாழக்கிழமை முன் பதிலளிக்க நடிகர் விஷால் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் ஆனந்தன் ஆகியோருக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதி என் சதீஷ்குமார் இடைக்கால உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பு நடிகர் மற்றும் இயக்குநரின் தரப்பினை விசாரிக்க முடிவு செய்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், ‘ஆக்‌ஷன்' படத்தின் வணிக ரீதியான செயல்திறன் மோசமாக இருந்ததால் ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டதாக விண்ணப்பங்களை தாக்கல் செய்தது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்துள்ளது, ஆனால் 2016-ஆம் ஆண்டில் மட்டுமே தயாரிப்பில் இறங்கியது என்று விண்ணப்பதாரரின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் நீதிபதியிடம் தெரிவித்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் சுந்தர்.சி இயக்கிய ‘ஆக்‌ஷன்' உட்பட 4 திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோசமாக அமைந்தது. ரூ. 44 கோடி செலவில் படத்தை தயாரிக்க விஷால் அவர்களை வற்புறுத்தினார் என்றும், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படம் வெளியாகி குறைந்தபட்சம் ரூ.20 கோடியை வசூலிக்கவில்லை என்றால் பற்றாக்குறையை தாங்க ஒப்புக் கொண்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியது.

ஆனால் அப்படம் தமிழ்நாட்டில் ரூ. 7.7 கோடியும், ஆந்திராவில் 4 கோடியும் மட்டுமே வசூலித்தது. எனவே, ரூ. 8.29 கோடி நிதி இழப்பை ஈடுசெய்ய விஷாலிடம் கோரியுள்ளது. நிறுவனம் சந்தித்த இழப்புகளை ஈடுசெய்ய விஷால் ஒரு உடன்படிக்கை செய்துள்ளதாகவும், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்து ஆனந்தன் இயக்கிய மற்றொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், நடிகர்-இயக்குநர் இருவரும் படத்தை OTT மேடையில் வெளியிடுவதைக் கேட்டு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. சக்ரா படத்தை அதன் ஐந்தாவது முயற்சியாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க வேண்டும் என்று நிறுவனம் கூறியது. இருவரும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்துடன் படத்தை வெளியிட முயற்சிக்கிறார்கள் என்று வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். சக்ராவுக்கான அசல் விநியோகத் தொகை ரூ. 44 கோடி என்றும் நிறுவனம் கூறியதுடன், நடிகர் விஷால் இழப்புக்களுக்கு போதுமான ஈடுசெய்யும் வரை திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்ய நீதிமன்றத்தில் நிறுவனம் முறையிட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com