முகப்புகோலிவுட்

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘நான் சிரித்தால்’ பட லேட்டஸ்ட் அப்டேட்..!

  | December 05, 2019 14:24 IST
Nan Sirithaal

துனுக்குகள்

  • ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 3-வது திரைப்படம் ‘நான் சிரித்தால்’
  • இப்படத்தை இயக்குநர் சுந்தர். சி தயாரிக்கிறார்.
  • இப்படத்தை ராணா இயக்குகிறார்.
‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி கதாநாயகனாக நடிக்கும் 3-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம்  ‘நான் சிரித்தால்'. அவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களையும் தயாரித்த, இயக்குநர்-நடிகர் சுந்தர் சி தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிப் ஹாப் தமிழா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதே நேரத்தில் இந்த போஸ்டரை ரஜினிகாந்தும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இப்படத்தின் இயக்குநர் ராணாவும் உடனிருந்தார். அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிர்டாம் பக்கத்தில் வெளியிட்டார் ஆதி. அதையடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவலை ஆதி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஷ்வர்யா மேனன் நடிக்கிறார். இதனை தனது இன்ஸ்டாவில் தெரிவித்த இப்படத்தின் ஹீரோ, மற்ற கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்