முகப்புகோலிவுட்

இந்த 14 நாட்கள் கடுமையானதாக இருக்கும்..!! - 'தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி..?'

  | June 01, 2020 08:38 IST
Coronavirus

துனுக்குகள்

  • 2008ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான ஆவக்காய் பிரியாணி
  • பிரபல நடிகர் கிருஷ்ணா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கழுகு
  • காரணம் எங்களது இந்த குடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தினருக்கு
2008ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான ஆவக்காய் பிரியாணி என்ற திரைப்படம் தான் பிரபல நடிகை பிந்து மாதவியின் முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சேரனின் பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார். வெப்பம், சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகர் கிருஷ்ணா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கழுகு பாகம் இரண்டு தான் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம். இந்த ஆண்டு மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சேல் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறவும் கொரோனா காரணமாக ஊரடங்கில் சிக்கியுள்ள பிந்து புதிய பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளார். 

அவர் கடந்த 30ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த காணொளியில்  "கார்ப்பரேஷன் அதிகாரிகள் தற்போது நான் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சீல் செய்து வருகின்றனர். காரணம் எங்களது இந்த குடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 14 நாட்கள் சற்று கடினமாக இருக்கும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com