முகப்புகோலிவுட்

"அது விரைவில் நடக்கும்..!!" - 'கிடாரியை' புகழ்ந்த ரசிகர், சசிகுமார் கொடுத்த அப்டேட்..!!

  | June 07, 2020 08:16 IST
Kidari

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' என்ற தனது
  • சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார்
  • "It’ll happen soon", அது விரைவில் நடக்கும் என்று
தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' என்ற தனது முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றி கண்டவர் தான் இயக்குநரும் நடிகருமான மஹாலிங்கம் சசிகுமார். ஆரம்பகாலத்தில் பிரபல இயக்குநர் பாலா அவர்களிடம் சேது உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பிறகு அமீர் அவர்களின் மௌனம் பேசியதே மற்றும் ராம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார் இதுவரை 20-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் நேற்று ட்விட்டர் தளத்தில் ரசிகர் ஒருவர் "சசிகுமார் நடிப்பில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்களில் கிடாரியும் ஒன்று. அருமையான கதாபாத்திர தேர்வு, திருப்தி அடையவைக்கும் கிளைமாக்ஸ் காட்சி. மீண்டும் இயக்குநர் முருகேசன் இயக்கத்தில் இப்படி ஒரு திரைப்படத்தை காண ஆவலாக உள்ளோம் என்று குறிப்பிட்டார். தற்போது அதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சசிகுமார் "It'll happen soon", அது விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com