முகப்புகோலிவுட்

அப்பாவானார் ‘சுமார் மூஞ்சி குமாரு’டைய ஃப்ரெண்டு டேனி..!

  | June 29, 2020 00:34 IST
Daniel

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பனாக தனது சிறப்பான நடிப்பால், அனைவரையும் கவர்ந்தவர் டேனி.

பொல்லாதவன், பையா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மரகத நாணயம், ரங்கூன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனப் பல படங்களில் தனது காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்தவர் டேனியல் ஆனி போப். ‘பிக் பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் பெரிய அளவில் கவனம் பெற்றார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பனாக தனது சிறப்பான நடிப்பால், அனைவரையும் கவர்ந்த டேனியல் மற்றும் அவரது காதலி டெனிஷா இருவரும் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது, இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

j0dqsd58

இந்த மகிழ்ச்சியான தகவலை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “சர்வவல்லமையுள்ளவரிடமிருந்து, மிக அருமையான பரிசாக நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்! தயவுசெய்து அவரை உங்கள் ஜெபங்களில் வைத்து அவரை ஆசீர்வதியுங்கள் - டேனியல் டெனிஷா” எனப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com