முகப்புகோலிவுட்

"அது ஒரு செம ப்ராஜெக்ட்" - வாடிவாசல் குறித்து ரசிகர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார்..!

  | September 21, 2020 12:31 IST
Gvp

துனுக்குகள்

 • ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசைப்புயல் ரகுமானின் சகோதரி பிரபல பாடகி
 • இந்நிலையில் நேற்று ட்விட்டர் வழியாக தனது விசிறிகள் கேள்விகளுக்கு பதில்
 • வெற்றி அவர்கள் ஆக்சன் எப்படி எடுப்பர் என்று நமக்கு தெரியும்
ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும் ஹாலிவுட் திரைப்படம் உள்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட படங்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டே உருவான பிரபல இயக்குநர் வசந்தபாலனின் 'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார், அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அபர்ணதி நடிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசைப்புயல் ரகுமானின் சகோதரி பிரபல பாடகி ஏ.ஆர்.ரெய்ஹானா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு வெளியான வெளியில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர் 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் 5-க்கும் அதிகமான படங்கள் வெளியாக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ட்விட்டர் வழியாக தனது விசிறிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் GVP. அப்போது வாடிவாசல் படம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டபோது அதற்கு பதில் அளித்தார். "அது ஒரு கில்லர் ஸ்கிரிப்ட், வெற்றி அவர்கள் ஆக்சன் எப்படி எடுப்பர் என்று நமக்கு தெரியும். நிச்சயம் அது ஒரு செம ப்ரோஜெக்டா இருக்கும்" என்று  தெரிவித்தார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com