முகப்புகோலிவுட்

'அல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு...' - செல்வராகவன் போட்ட அடுத்த ட்வீட்

  | February 29, 2020 10:21 IST
Selvaragavan

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்பேன் என்று முன்பு கூறியதும் குறிப்பிடத்தக்கது

துனுக்குகள்

 • 'அல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு...' - செல்வராகவன் போட்ட அடுத்த ட்வீட்
 • செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
 • ரசிகர்களை மிகவும் சோகத்திற்கு உள்ளாகியது
கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் புதிய திரைப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி வருவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இருக்கு பல திறமையான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர், என்ஜிகே படத்திற்குப் பிறகு வெகு நாட்களாக தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அவர் அறிவிக்காமலிருந்தது அவர் ரசிகர்களை மிகவும் சோகத்திற்கு உள்ளாகியது. 

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் அவரின் அடுத்த படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடையவுள்ளதை அறிவித்திருப்பது அவர் ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க கலைப்புலி தாணு இந்த திரைப் படத்தைத் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தைக் கண்டிப்பாக எடுப்பேன் என்று முன்பு கூறியதும் குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com