முகப்புகோலிவுட்

"அரசு தன் மானத்தை அடகு வைத்து..!!" - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கமல்ஹாசன் ட்வீட்

  | May 22, 2020 12:26 IST
Thoothukudi Copper Smelter

துனுக்குகள்

 • தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு
 • பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை
 • முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது", என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com