முகப்புகோலிவுட்

42 ஆண்டு கால திரைப் பயணம்- வாழ்த்திய ‘இயக்குநர் இமயம்’, மகிழ்ச்சியில் ராதிகா.!!

  | August 13, 2020 20:37 IST
42 Years Of Radhika

"கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்"

முன்னாள் கதாநாயகியும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் சமீபத்தில் திரையுலகில் 42 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததோடு தொடர்ந்து திரைத்துறையில் காலூன்றி நிற்கிறார். அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். 1978-ஆம் ஆண்டில் ‘கிழக்கே போகும் ரெயில்' திரைப்படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்திய புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, அவரது இந்த நீண்டகால வெற்றிப் பயணத்தை வாழ்த்தியுள்ளார்.

ராதிகாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த ‘இயக்குநர் இமயம்' பாரதிராஜா, “என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்.. 42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..” என்று பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் பாரட்டுக்கு பதிலளித்த ராதிகா, “இதை விட சிறப்பு இருக்க முடியுமா, நான் நானாகவே இருக்கிறேன், அப்படி உங்களால் மட்டுமே இருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களே என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த கோட்டையிலும் ஒரு பெண்ணின் சாதனைகளை கொண்டாடாத இந்த சமகாலத்தவர்களிலும், உங்கள் வார்த்தைகள் சாதாரணத்தை விட உயர்ந்தது... எப்போதும் போல” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், பணி முன்னிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 2 படங்கள் வெளிவர, இந்த 2020ஆம் ஆண்டு ‘வானம் கொட்டட்டும்' என்ற படம் வெளியானது. மேலும், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்', ஜி.வி. பிரகாஷின் ‘ஜெயில்' மற்றும் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்' படங்கள் உட்பட 5 படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com