முகப்புகோலிவுட்

“சசிலலிதா” அரசியல் ஆளுமையின் சரிபாதி…? படமாகும் வாழ்க்கை

  | April 09, 2019 13:37 IST
Sasi Lalitha

துனுக்குகள்

  • தலைவி என்கிற பெயால் ஏ.எல். விஜய் ஜெயலலிதா படத்தை இயக்குகிறார்
  • ‘தி அயர்ன் லேடி’ படத்தை பிரியதர்ஷினி இயக்குகிறார்
  • ஜெகதீஸ்வர ரெட்டி சசிலலிதா படத்தை இயக்கி தயாரிக்கிறார்
தெலுங்கு திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ்திரையுலகிலும் தனது பேச்சால் சலசலப்பை ஏற்படுத்தி வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்னிறுத்தி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல இயக்குநர்கள்  முயற்சி செய்து வருகிறார்கள்.
 
மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியதர்ஷினி  ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் ‘தி அயர்ன் லேடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி' படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகை  கங்கனா ரணாவத் நடிக்கவிருக்கிறார்.
 
இவை தவிர கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற தலைப்பில் இணைய தொடராக ஜெயலலிதா வாழ்க்கை படம் உருவாகிறது.
 
இந்த படங்களுக்கு இடையே சசிலலிதா என்ற பெயரில், இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா சசிகலா இருவரின் படங்களும் உள்ளன.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்