முகப்புகோலிவுட்

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜெகமே தந்திரம்’ முதல் சிங்கில்..! ரகிட ரகிட ரகிட…!!

  | July 01, 2020 16:57 IST
Dhanush

இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தனுஷ் ஒரு அரிய திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற கதாநாயகனாகவும் வலம் வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இப்போது 40 படங்களைக் கடந்து அசைக்கமுடியாத தூணாக நிற்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் ஆவார்.

கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்' திரைப்படத்தில் காணப்பட்ட அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது ‘ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். ஜூலை 28-ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால், இந்த மாதம் முழுவதையும் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் இணைந்த படக்குழுவும், இன்று காலை ‘ஜெகமே தந்திரம்' அப்டேட் கொடுப்பதாக நேற்றே அறிவித்தது.

அதேபோல், இன்று காலை ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை வழங்கியுள்ளது. ஆம், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘ரகிட ரகிட ரகிட' எனும் பாடல் தன்ஷின் பிறந்தநாளன்று வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 


இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் தயாரித்துள்ளார். சக்கரவர்த்தி ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா வேலைகளைக் கையாண்டிருக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com