முகப்புகோலிவுட்

ஷூட்டிங்கை 46 நாட்களில் நிறைவு செய்த 'ஜருகண்டி' டீம்

  | May 25, 2018 14:32 IST
Jarugandi Movie

துனுக்குகள்

 • ஜெய்-க்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் டூயட் பாடி ஆடி வருகிறார்
 • இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
 • நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்
சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு ஜெய் கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, பிச்சுமணியின் ‘ஜருகண்டி’, சுரேஷின் ‘நீயா 2’, சியாம் – பிரவீன் இணைந்து இயக்கும் ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஜருகண்டி’ படத்தை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்’ எனும் மலையாள பட புகழ் ரெபா மோனிகா ஜான் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். போபோ ஷஷி இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் குமார் - ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றனர், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. சமீபத்தில், படத்தின் டப்பிங் பணி துவங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் ஷூட்டிங்கை 46 நாட்களில் முடித்துள்ளனராம்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com