முகப்புகோலிவுட்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக கஜோல், சசிகலாவாக அமலா பால்…?

  | April 17, 2019 10:12 IST
Kajol

துனுக்குகள்

 • தலைவி படத் ஏ.எல்.விஜய் இயக்குகிறார்
 • ஏ.எல்.விஜய் இயக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்
 • ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. இந்த படத்திற்கு  தலைவி என்று பெயரிட்டிருக்கிறார் இயக்குநர்.
 
 இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியானது. தலைவி என்ற பெயரில் தமிழில் உருவாகும் இந்தப் படம் இந்தியில் ‘ஜெயா' என்ற டைட்டிலுடன் உருவாகிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கிறார்.
 
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தி அயர்ன் லேடி என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்தப் படத்துக்கு ‘சசிலலிதா' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படம் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படமாக இருக்கும் என்றும் ஜெகதீஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலிடமும், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த 3 படங்கள் தவிர கவுதம் வாசுதேவன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை வெப் சீரிஸாக இயக்குகிறார். இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com