முகப்புகோலிவுட்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! ஜெ.வின் உறவினர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எச்சரிகை!

  | September 12, 2019 12:24 IST
Gautham Vasudev Menon

துனுக்குகள்

 • ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் படமாக்கி வருகிறார்
 • கவுதம் வாசுதேவ் மேனன் இந்த இணையதள தொடரை இயக்கி வருகிறார்
 • ரம்யா கிருஷ்ணன் இதில் ஜெ. வாக நடித்து வருகிறார்
மறைந்த முன்னால் முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏ.எல்.விஜய் தலைவி என்கிற பெயரில் இப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவிருக்கிறார்.
 
இவரை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணயதள தொடராக இயக்கி வருகிறார் கவுதம் வாசு தேவ் மேனன். இதில் ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.இதற்கு ‘குயின்' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
 
கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் இந்த இணையதள தொடரை எடுக்கக் கூடாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரித்துள்ளார்.
 
பிரபல அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தலைவி என்ற படத்தை இயக்கவுள்ள இயக்குநர் விஜய், தன்னை நேரில் சந்தித்து முழுக் கதையையும் கூறி முன் அனுமதி பெற்றதாகவும் தீபக் தெரிவித்துள்ளார்.
 
உண்மையை மட்டுமே படமாக்க உள்ளதாகவும், எந்த வகையிலும் ஜெயலலிதா குறித்த அவதூறு காட்சிகள் இருக்காது என்று விஜய் உறுதி அளித்திருப்பதாகவும் தீபக் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில், எந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை, கவுதம் வாசுதேவ் மேனன் படமாக்க உள்ளார் என்பதையும், குயின் என்று அவர் குறிப்பிடுவது யாரை என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் வலியுறுத்தியுள்ளார்.
 
தங்கள் குடும்பத்தினரின் முன் அனுமதி பெறாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாகவோ, இணையதள தொடராகவோ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுதம் வாசுதேவ் மேனனுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com