முகப்புகோலிவுட்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு- ‘தலைவி’ என்று பெயரிட்ட படக்குழு

  | February 25, 2019 11:55 IST
Jayalalitha Biopic

துனுக்குகள்

  • தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகிறது
  • இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறார்
  • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்
நடிகையாகவும், அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர இருக்கிறது.
 
இன்று (பிப்.24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். விப்ரி மீடியா நிறுவனம்  இப்படத்தை தயாரிக்க உள்ளது. ஜெயலலிதா பயோபிக்கிற்காக, அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. 'தலைவி' படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு.  இப்படம் குறித்து பேசிய இயக்குநர்,
  
'தலைவி'  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர்.
 
இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். என்றார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்