முகப்புகோலிவுட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் - வெளியான 'தலைவி Second Look'

  | February 24, 2020 12:26 IST
Al Vijay

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

துனுக்குகள்

  • இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்
  • இந்த படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது
  • இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையல்ல
இயக்குநர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் தான் 'தலைவி'. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் தயாராகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியானது. எம்.ஜி.ஆர் வேடத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி அழகாக நடித்திருந்தார். அந்த நொடி முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மற்றும் கங்கனா ராவத் ஆகிய இருவருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றும், கண்டிப்பாக கங்கனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்