முகப்புகோலிவுட்

ரஜினியிடம் மன்னிப்பு கோரிய ஜெயம் ரவி!!!

  | August 06, 2019 15:26 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • ரஜினி ரசிகர்கள் சர்ச்சை காட்சியை நீக்கக்கோரி கண்டனம் தெரிவித்தனர்
  • கமல் இந்த காட்சியை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கூறினார்
  • ஜெயம் ரவி இந்த காட்சிக்காக ரஜினிடியிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார்
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘கோமாளி'. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15ல் வெளியாக இருக்கிறது.
 
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறும் வீடியோ ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதை நகைச்சுவையாக விமர்சிக்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கமல் உட்பட ரஜினி  ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இப்படத்தின் இயக்கநர் பிரதீப் ரங்கநாதன் இருவரும் மன்னிப்பு கோரி இந்த காட்சியை நீக்குவதாக அறிவித்தார்கள். மேலும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பும் ரசிகர்களில் நாங்களும் அடங்குவோம் ஆகவே இந்த காட்சியும் அதன் அடிப்படையில் வைக்கப்பட்டதே தவிற வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்கள். இவர்களைத் தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி, மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை உற்று நோக்கி காத்திருக்கும் ஆட்களில் தானும் ஒருவன் என்றும், இது காமெடியான படம் என்பதால் சித்தரிப்புக்காக  இந்த காட்சி வைக்கப்பட்டது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்