முகப்புகோலிவுட்

“ஜெயம்” தொடங்கி “கோமாளி” வரை ஜெயம் ரவி கடந்து வந்த பாதை!

  | September 10, 2019 16:53 IST
Jayam Ravi

துனுக்குகள்

 • ஜெயம் ரவி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்
 • திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
 • இவர் நடிப்பில் வெளியான கோமாளி படம் நல்ல வரவேற்பை பெற்றது
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் தனக்கென் தனி பாதையையும், அடையாளத்தையும் திரையுலகில் ஆழமாக பதித்து வருகிறார் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன்.
 
இவருடைய இயற்பெயர் மோகன் ரவி. இவரது தந்தை மோனின் தயாரிப்பில் சகோதரர் மோகன ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் தமிழ் சினிமாவிற்கு நாயகனாக அறிமுகமானார் ஜெயம் ரவி. அந்த படத்தில் இருந்த அர்பனிப்பும் நடிப்பு மீது இவருக்கு இருந்த காதலும் இப்படத்தை ஜெயமாக்கியது. இப்படத்தின் வெற்றியே மோகன் ரவியை ஜெயம் ரவியாக மாற்றியது.
 
ஜெயம் ரவியின் அடுத்த படம் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி” தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. அம்மா மகன் பாசத்தில் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்ததோடு தமிழ் ரசிகர்களின் கண்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
 
இதை அடுத்து ஆண்டு ஒரு படம் என அடுத்தடுத்து கதைகள் இவரைத் தேடி வந்தன. சில திரைப்படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஜெயரம் ரவியின் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் கருவியாகவும் மக்களின் கவனத்தை பெற்ற கலைஞனாகவும் மாறினார் ஜெயம் ரவி.
 
இவர் நடித்த தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, நிமிர்ந்து நில்,  தனி ஒருவன், போன்ற படங்கள் இவருடைய சினிமா பயணத்தில் முக்கியமானவை. தனி ஒருவன் திரைப்படம் பல விருதுகளை குவித்த படம்.

இப்படத்திற்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்க்ளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பூலோகம் திரைப்படம் எளிய மக்களின் கிக்பாக்ஸிங் விளையாட்டைப் பற்றியும் அதன் அரசியல் பற்றியும் பேசியது. சென்னைவாழ் பூர்வகுடி இளைஞர்களின் கவனத்தை திருப்பிய படமாக அமைந்தது. டிக் டிக் டிக் திரைப்படம் தமிழில் வெளியான முதல் ஸ்பேஸ் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து “அடங்க மறு” சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமைந்தது. தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தடம் பதித்து வருகிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திற்கு பிறகு இவரது ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
 
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கோமாளி. ஜெயமாக தொடங்கி கோமாளி வெற்றிவரை ஜெயம் ரவி கடந்து வந்த பாதை எளிதானது அல்ல. நாள் ஒன்றுக்கு புதுமுகங்கள் பலர் சினிமா துறையில் ஆக்கிரமிக்க ஏற்கனவே முன்னணி நடிகர்களின் பாய்ச்சலில் சினிமா களம் போட்டிகள் நிறைந்ததாக இருக்க தன் இருப்பை தக்க வைக்க போட்டிகளிடையே தன்னை நல்ல கலைஞனாக வளர்த்துக்கொள்ளும் ஜெயம் ரவிக்கு எப்போதும் ஜெயம்தான். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயம் ரவி!!
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com