முகப்புகோலிவுட்

புதிய படத்துக்காக 18 கிலோ வெயிட் குறைச்ச ஜெயம் ரவி

  | December 08, 2018 15:01 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • ஜெயம் ரவி கைவசம் 3 படங்கள் உள்ளது
  • பிரதீப் ரங்கநாதன் படம் ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம்
  • இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்
சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு', மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2' மற்றும் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதன் படம் ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக படத்துக்கு ‘கோமாளி' என டைட்டில் வைத்துள்ளனர். ஆனால், இது ஃபைனல் டைட்டில் இல்லையாம். தற்போது, இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 8 கெட்டப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கெட்டப்புக்காக ஜெயம் ரவி 18 கிலோ வெயிட் குறைச்சு நடித்துள்ளாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்