முகப்புகோலிவுட்

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் டாப்சி…!

  | May 08, 2019 17:36 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • லட்சுமணன் இப்படத்தை இயக்குகிறார்
  • ஜெயம்ரவி, டாப்சி இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை டாப்சி. தமிழில் ஆடுகளம் படத்திற்கு பிறகு வெளியான ஒரு சில படங்களைத் தவிற மற்றப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
 
இதனால் இந்தி சினிமாவிற்கு சென்ற அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கிறது. இன்று இந்தி சினிமாவில் முன்னணி நாயகிகள் பட்டியலில் இணைந்துள்ளார் இவர்.
 
இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் டாப்சி ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் தமிழில் ‘கேம் ஓவர்' படத்தைத் தொடர்ந்து அடுத்து ஜெயம் ரவியுடன் நடிக்கிறார்.ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். டி.இமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
 
இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சுஜாதா விஜயகுமார் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாக உள்ளது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்