முகப்புகோலிவுட்

6 நாட்களில் 25 கோடி! ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் சாதனை படைத்த கோமாளி!

  | August 23, 2019 16:29 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • இப்பபடம் கடந்த ஆகஸ்ட் 15ல் வெளியானது
  • ரஜினி குறித்த சர்ச்சைகுறிய வீடியோவை படக்குழு இப்படத்தில் நீக்கியது
  • ஜெயம் ரவி நடித்த படங்களிலே இப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது
கோமாளி படம் வெளியான 6 நாட்களில் 25 கோடி ரூபாய வசூல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘கோமாளி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.  கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இப்படம் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தது.
 
6 நாட்களில் தமிழக அளவில் 25 கோடி ரூபாய் வசூலை கோமாளி படம் ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இப்படம் முன்னிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவில் வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
 
தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தில் இடம்பெற்ற பைசா நோட்டு பாடலின் வீடியோவை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்