முகப்புகோலிவுட்

கோமாளி படம் வெளியாகுமா? தயாரிப்பாளர்களை மிரட்டும் கும்பல்!

  | August 13, 2019 19:03 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • கோமாளி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது
  • தன்னை சிலர் மிரட்டுவதாக ஞானவேல் ராஜா புகார்
  • தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
ஸ்டியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஞானவேல் ராஜா தன்னை சிலர் மிரட்டுவதாக கூறியிருக்கிறார்.
 
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் போதிய வரவேற்பை பெற்வில்லை. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ராஜேஷ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி விநியோகம் செய்தது. இதில் திருச்சி விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அதனை சரி செய்து கொடுக்குமாறு திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர்கள் சிலர் மிரட்டுவதாக கூறிகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
''திருச்சி விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சில நபர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டும் போக்கு பற்றிய விவகாரம் இது.
பணத்துக்காக தனிப்பட்ட முறையில் பல தயாரிப்பாளர்கள் இந்த மிரட்டல் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டேதான் இருக்கின்றனர். இந்த முறை என்னை மிரட்டியுள்ளனர். நான் ஸ்டூடியோ கிரீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளராக தமிழ்நாடு திரையரங்க உரிமைகளை தன்வீ பிலிம்ஸுக்கு முழுவதும் விற்று விட்டேன். அவர்கள் திரையரங்க உரிமைகளுக்கான பிற ஏரியா உரிமைகளை ராயல்டி அடிப்படையில் ஜீடி என்பவருக்கு விற்றுள்ளனர். ஜீடி என்பவர் திரையரங்குகளிடமிருந்து அட்வான்ஸ் பெற்றுள்ளார்.
 
ஆனால், துரதிர்ஷ்டவசமாக திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெற்றுத் தரவில்லை. எனக்குமே இது பெரிய கஷ்டங்களைக் கொடுத்தது என்பதே உண்மை. இந்நிலையில் ஜீடி-யுடன் ( ரவி, மீனாட்சி சுந்தரம்) மற்றும் பலரும் என் அலுவலகத்திற்கு வந்து திருச்சி விநியோகஸ்தர்கள் எனக்கு ரெட் கார்டு போட்டிருப்பதாகவும் ரூ.1.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் இல்லையெனில் நான் வர்த்தகம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தனர்.
 
நான் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் வெளிப்படையான மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் ஆகும். ஆகவேதான் நான் என் புகாருடன் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினேன். சில தனி நபர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பணத்துக்காக மிரட்டும் செயல் இது. இந்த நடைமுறையில் ஈடுபட்டோருடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.
 
திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஜேஎஸ்கே, சிவா, பாரதிராஜா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களும் மிரட்டல் குறித்து அதிர்ச்சியடைந்து இதில் ஈடுபட்டவர்களைத் தொடர்பு கொண்டனர். ஆனால் இவர்களுக்கும் அதே மிரட்டல்தான் பதிலாகக் கிடைத்தது. ஜேஎஸ்கே, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் 'கோமாளி' படத்தை நிறுத்தவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதில் தயாரிப்பாளருக்கு எந்தப் பங்கும் இல்லை. அப்பாவி தயாரிப்பாளர் மிரட்டப்படுகிறார். நான் மட்டுமல்ல, நிறைய தயாரிப்பாளர்கள் இதே தனி நபர்களால் தொடர்ந்து மிரட்டப்பட்டும் தொல்லைக்கும் ஆளாகியுள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஆகவே ஜேஎஸ்கே, நான் உட்பட இவர்களிடம் சிக்கித் தவிக்கும் பிற தயாரிப்பாளர்களையும் இதிலிருந்து மீட்க வேண்டும்'' என்று ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்