முகப்புகோலிவுட்

ரஜினி ரசிகர்களை மீண்டும் சீண்டும் ‘கோமாளி’! டிரெய்லர் சர்ச்சை அடுத்து பாடலிலும் சர்ச்சை!

  | August 07, 2019 11:49 IST
Comali

துனுக்குகள்

  • டிரெய்லரைத் தொடர்ந்து பாடலிலும் சர்ச்சை வெடித்துள்ளது
  • ரஜினி ரசிகர்கள் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
  • படம் வரும் ஆகஸ்ட் 15ல் வெளியாக இருக்கிறது
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபு,காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் கோமாளி. ஆகஸ்ட் 15 வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ரஜினி பேசும் வீடியோ ஒன்று நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கமல் ஒருபடி மேலே சென்று தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு அந்த காட்சியை நீக்குமாறு கூறியிருந்தார். இதனை அடுத்து படக்குழு இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
இந்த நிலையில், கோமாளி படத்தின் பாடல் ஒன்றில், ரஜினியின் வயதை விமர்சிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. “சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி  ஆயிருச்சே”, இப்போ பேத்தியெல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே என்ற பாடல் வரிகள் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது ரஜினியின் வயதை கேலி செய்யும் விதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரைலரின் சர்ச்சை அடங்குவதற்குள் பாடல் வரிகள் அடுத்த பிரச்சினைக்கு அச்சாரம் போட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் சொல்ல இருக்கிறது படக்குழு என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்