முகப்புகோலிவுட்

கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பிரபாஸ் உடன் மோதும் ஜெயம் ரவி!

  | July 09, 2019 21:34 IST (Angola)
Comali

துனுக்குகள்

 • ஜெயம் ரவியின் 24வது படம் கோமாளி
 • பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி இருக்கும் படம் சஹோ
 • இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் கடும் போட்டி இருக்கக்கூடும்
அடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படம் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதேநாளில் இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது பிரபாஸின் ‘சாஹோ'. ஆக்‌ஷன் படமான சாஹோ அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சாஹோவுடன், கோமாளியும் ஒரே நாளில் வெளியாவதால் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com