முகப்புகோலிவுட்

அரசியல் நிலைபாட்டை வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி…?

  | May 13, 2019 11:37 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • இப்படத்தை லக்ஷ்மன் இயக்குகிறார்
  • இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படம்
  • இது விவசாயம் பற்றிய படம்
ஜெயம் ரவி அடங்கமறு படத்திற்கு பிறகு லக்ஷ்மன் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இத படம் ஜெயம் ரவியின் 25வது படம். இப்படம் குறித்து பேசிய அவர்,

‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2' பண்ணலாம்னு சொல்லியிருக்கார். என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை'யும் ஒண்ணு.
 

இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை பாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ள தான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கவில்லை' இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்