முகப்புகோலிவுட்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்!

  | August 28, 2019 16:28 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

  • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்
  • இந்த படத்திற்கான நடிகை நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது
  • ஐஷ்வர்யா ராய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்
கல்கியின் நாவலான பொன்னியன் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் இந்திய சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
 
jh3392f8


இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் மனிரத்னம் அறிவிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இப்படத்தில் இணையும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வந்தவன்னமே உள்ளது. அதன் படி இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கீர்த்தி சுரேஷ், ஐஷ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
நடிகை ஐஷ்வர்யா ராய் இதை நிகழ்ச்சி ஒன்றில் உறுதிபடுத்தியிருந்தார். இவரைத்தொடர்ந்து தற்போது மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதனை அவர் உறுதி செய்திருக்கிறார். மிக வேகமாக இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மனிரத்னம் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்