முகப்புகோலிவுட்

விஜய் விக்ரம் அடுத்து அஜித்தான்- கதைக்காக காத்திருக்கும் ஜீவா

  | March 29, 2019 21:33 IST
Jeeva

துனுக்குகள்

 • கீ படம் ஏப்ரல் 12ல் வெளியாகி இருக்கிறது
 • ஜிப்சி படத்தில் இவர் நடித்திருக்கிறார்
 • கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது
தமிழில் ராம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. அதனைத்தொடர்ந்து. பல வெற்றிபடங்களை கொடுத்தவர் ஈ, கோ, கீ என ஒற்றை எழுத்து படங்களில் கலக்கி வருகிறார்.

தற்போது இவர் நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் 'இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போயிட்டேன்,. ஜிப்சி எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நிம்புகிறேன். நானும் திரைப்படம் வெளியாவதற்காக காத்திருக்கிறேன்.

தமிழில் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்'.
கீ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இதில் இந்த படம் ஏப்ரல் 12ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர்.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com