முகப்புகோலிவுட்

ராஜுமுருகனின் ஜிப்ஸி படம் வெளியாவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்…?

  | April 06, 2019 19:00 IST
Jeeva

துனுக்குகள்

  • ஜிப்ஸி பட்த்தில் ஜீவா நடித்திருக்கிறார்
  • இந்த படத்தை ராஜுமுருகன் இயக்கி இருக்கிறார்
  • இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது
குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் நடாஷா சிங், ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இந்த படத்தின் பாடல் வெரி வெரி பேட் பாடல் வெளியாகி பரபரப்பானது. இந்த பாடலில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக போராளிகள் பலரும் இடம் பெற்றிருந்தனர். இந்த பாடலில் நடித்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் சமீபத்திர் காணாமல் ஆக்கப்பட்டார். புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினிர் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு அரசூர் மூவிஸ் உரிமையாளரான அம்பேத்குமார் பப்பாளி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். இந்த தொகையை 3 மாத காலத்துக்குள் வட்டியுடன் திரும்ப தருவதாக கூறியிருந்தார்.
 
இந்த தொகையை பப்பாளி திரைப்படத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பப்பாளி படம் வெளியான பின்னரும் கூட அம்பேத்குமார் என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரவில்லை.
 
இந்தநிலையில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே என்னிடம் வாங்கிய ரூ.40 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.45 லட்சமாக திருப்பித் தராமல் ஜிப்ஸி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்தவழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்