முகப்புகோலிவுட்

ஜீவா-ரன்வீர் சிங்கின் ’83’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | June 30, 2020 13:32 IST
Jeeva

கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தமிழில் வழங்குகிறார்கள்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலகக்கோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”. கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து “83” படத்தின் தமிழ் பதிப்பை வழங்குகிறார்கள்.

இப்படத்தை கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்க, நடிகர் ஜீவா ஶ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரியாக நடிக்கிறார். Reliance Entertainment, Y Not X  இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருந்தது. ஆனால், தற்போது உலகையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் ‘கொரோனா வைரஸ்' தொற்று பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீடு மற்ற பல திரைப்படங்களைப் போலவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுகு முன்பு, இந்த திரைப்படம் நேரடி ஆன்லைன் வெளியீட்டிற்காக பெரும் தொகை வழங்கப்பட்டதாகவும், ஆனால் இப்படத்தின் இயக்குநர் கபீர் கான், அவர் கற்பனை செய்தது போல அப்படத்தைப் பெரிய திரையில் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை காத்திருந்து வெளியிடுவதற்கு அவர் தயாராக உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com