முகப்புகோலிவுட்

அந்தோணி தாஸ்- பூவையார் இணைந்து கலக்கும் கொரில்லா படத்தின் ஜில்லாக்கி பாடல்!

  | June 27, 2019 18:41 IST
Jeeva

துனுக்குகள்

 • சாம் சி எஸ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
 • வரும் ஜுலை 5ல் இப்படம் வெளியாக இருக்கிறது
 • இப்படத்தை டான் சாண்டி இயக்கி இருக்கிறார்
இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘கொரில்லா'. சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, சதீஷ் இன்னும் பலர் நடித்துள்ளார்.

வரும் ஜுலை 5ல் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘ஜில்லாக்கி' பாடல் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. இப்பாடலை அந்தோணி தாஸ் மற்றம் பூவையார் இருவரும் பாடி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிம்பாங் குரங்கும் நடித்திருகிறது என்பது எற்கனவே தெரிந்த ஒன்று. இந்நிலையில் இப்பாடலில் அந்த குரங்கு செய்யும் சேட்டைகள் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
 

 
குரங்கின் சேட்டையாள் இப்பாடல் குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது. இப்பாடலின் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com