முகப்புகோலிவுட்

நாளை வெளியாகும் ஜீவாவின் ஜிப்ஸி - போட்டிபோடும் நான்கு படங்கள்

  | March 06, 2020 10:46 IST
Jeeva

துனுக்குகள்

 • நடராஜன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் வெல்வெட் நகரம்
 • சமுத்திரக்கனி நடிப்பில் நாளை வெளிவருகிறது 'எட்டுத்திக்கும் பற'
 • லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளிவர உள்ள பட தான் 'இந்த நிலை மாறும்'
அரசியலும் திரைப்படமும் பிரிக்கமுடியாத ஒன்று, தற்கால சினிமாவில் பேசப்படும் அரசியல் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோக்கர். நிகழ்கால அரசியல் நிலைமையைப் பெரிதும் பேசிய படம் அது. தற்போது அந்த படத்தை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், ‘ஜிப்ஸி' எனும் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தேசிய அளவில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளைக் கையாண்டு படமாக்கியுள்ளார். 

இந்நிலையில் இந்த படம் நாளை உலகமெங்கும் வெளிவர உள்ளது. மேலும் ஜீவாவின் ஜிப்ஸி படத்துடன் சேர்த்து நாளை 4 படங்கள் வெளியாக உள்ளன. மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் வெல்வெட் நகரம். அதே போலக் கீரா இயக்க இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் நாளை வெளிவருகிறது 'எட்டுத்திக்கும் பற' என்ற திரைப்படம், இந்த படம் அண்மையில் இதன் தலைப்புக்காகச் சர்ச்சையில் சிக்கிது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஹரி சந்தோஷ் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு, மதுபாலா மற்றும் புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பில் வெளிவர உள்ள படம் தான் காலேஜ் குமார். மேலும் அருண் காந்த இயக்கத்தில் Y.G.மகேந்திரன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளிவர உள்ள படம்தான் இந்த நிலை மாறும். 

ஜீவா படத்துடன் நாளை இந்த நான்கு படங்களுக்கு மொத உள்ளன. ஏற்கனவே பல  சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜிப்ஸி படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.       
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com