முகப்புகோலிவுட்

'உங்கள் அர்ப்பணிப்பிற்கு என் வணக்கம்' - முதல்வரை பாராட்டிய உலக நாயகன்

  | March 27, 2020 12:22 IST
Kamal

துனுக்குகள்

 • இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல மொழி நடிகர்களும்
 • பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் தங்களது அலுவலகம் மற்றும் வீடுகளை
 • உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நாளுக்கு நாள் உயிர் பலி வாங்கிக்கொண்டே
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நாளுக்கு நாள் உயிர் பலி வாங்கிக்கொண்டே இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ மருந்து கண்டறியப்படாத நிலையில் ஒவ்வொரு தனி மனிதனும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதே சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயை தடுக்க வழி தெரியாமல் இருந்து வருகின்றன. ஏற்கனவே மார்ச் மாதம் 31ம் தேதி வரை இந்தியாவில் விதிக்கப்பட்டியிருந்த அந்த 144 தடை, தற்போது இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல மொழி நடிகர்களும் தங்களால் இயன்ற உதவியை தங்களது மாநில அரசுக்கும் இந்திய அரசுக்கும் செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் தங்களது அலுவலகம் மற்றும் வீடுகளை மருத்துவமனையாகத் தர தயார் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் முதல் முறையாக கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேககமாக 1000 படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ள முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கின்றது என்றும், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான அசாதாரண முயற்சியை எடுத்த முதல்வர் நவீன் அவர்களே உங்கள் அர்ப்பணிப்புக்கு என் வணக்கங்கள்" என்று கமல் கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com