முகப்புகோலிவுட்

உதவி இயக்குநராகும் ஜீவா!! ‘மேதாவி’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

  | May 23, 2020 19:59 IST
Jiivaa

ராஷி கண்ணா பத்திரிக்கை நிருபராக நடிக்கிறார்.

பிரபல பாடல் ஆசிரியரும் நடிகருமான பா.விஜய் இயக்கத்தில், மக்கள் அரசன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் “மேதாவி”. கடந்த வாரம் இப்படத்தின் தயாரிப்பாளர் சு.ராஜாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன் மற்றும் ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கின்றார். நகைச்சுவை பங்கிற்கு சாரா, ‘கைதி' புகழ் தீனா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்யவுள்ளார். பூட்டுதல் தளர்த்தப்பட்ட பிறகு இப்படத்திற்கான ஷூட்டிங் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இப்போது, இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஜீவவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  ஆக்‌ஷன் கிங் இதில், விசாரணை போலீஸ் அதிகாரியாகவும், ஜீவா உதவி இயக்குநராகவும், ராஷி கண்ணா பத்திரிக்கை நிருபராகவும் நடிக்கவுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com