முகப்புகோலிவுட்

அனல் பறக்கும் ‘சீறு’ ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்..!

  | January 24, 2020 12:43 IST
Seeru

துனுக்குகள்

  • ‘சீறு’ திரைப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.
  • இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
  • இதில் ஜீவாவுக்கு நண்பனாக வருண் நடிக்கிறார்.
ஜீவா கதாநாயகனாக நடிக்கும் சீறு திரைப்படத்தின் ட்ரைலரை இன்று தனுஷ் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க' திரைப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சீறு'. இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். அதெபோல், ஜீவாவுக்கு வில்லனாக ‘அறிந்தும் அறியாமலும்' நவ்தீப் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

கடைசியாக ‘கொரில்லா' திரைப்படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், நினைத்த அளவுக்கு வெற்றிபெறாமல் போன நிலையில், ‘சீறு' படம் ஜீவாவுக்கு ஒரு நல்ல கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திலிருந்து, டி. இமான் இசையில் நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் குரலில் ‘செவ்வந்தியே' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனல் பறக்கும் காட்சிகளைக் கொண்ட இந்த  ட்ரைலர் தற்போது வைரலாகிவருகிறது.
ஜீவாவுக்கு சீறு படத்தையடுத்து, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி', அருள்நிதியுடன் இணைந்து ‘களத்தில் சந்திப்போம்' மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் ‘83' ஆகிய படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்