முகப்புகோலிவுட்

ஜீவாவின் ‘கொரில்லா’ பட டீசரை வெளியிட்ட சூர்யா

  | September 17, 2018 11:00 IST
Gorilla Movie

துனுக்குகள்

  • ‘கொரில்லா’ படத்தில் சிம்பான்ஸி குரங்கு நடித்துள்ளதாம்
  • ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்
‘கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா கைவசம் ‘கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி’ ஆகிய 4 படங்கள் உள்ளது. இதில் ‘கொரில்லா’ படத்தை ‘மகாபலிபுரம்’ பட இயக்குநர் டான் சேண்டி இயக்குகிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியுள்ளார். காமெடியில் கலக்க யோகி பாபு, சதீஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாம். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்