முகப்புகோலிவுட்

ஜீப்ஸியின் ப்ரோமோ பாடல் வீடியோ

  | January 19, 2019 17:47 IST
Gypsy Movie

துனுக்குகள்

  • ராஜுமுருகனின் மூன்றாவது படம் இது
  • ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்
  • சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். இவரின் அடுத்த படைப்பு ஜீப்ஸி. ஜீவா நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது.

அம்பேத்கர், பெரியார் புகைப்படத்துடன் துவங்கும் இந்த வீடியோவில், சே குவேரா சட்டை அணிந்த சந்தோஷ் நாராயணன் சிறைக்குள் அழைத்து செல்லபடுவார். அங்கு சமூக ஆர்வலர்கள் (போராளிகள்) பலர் இருக்கின்றனர். திருமுருகன் காந்தி, பியூஸ் மணுஷ், திருநங்கை கிரேஸ் பாணு, முகிலன் உள்ளிட்டவர்கள் அங்கு சிறைவாசிகளாக இருக்கின்றனர்.
 

சந்தோஷ் நாராயணனை பார்த்து எதற்கு உங்களை கைது செய்தனர், ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் செய்தீர்களா?  திருநங்கைகளுக்காக ஆதரவு தெரிவித்தீர்களா?, சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களா? சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்தீர்களா என அவர்கள் கேட்கிறார்கள்.
அதற்கு சந்தோஷ் நாராயணன், இல்லை ஒரு பாட்டு பாடினேன் அதற்கு தான் சிறைவாசி ஆகியுள்ளேன் என தெரிவிப்பார். ‘Very very bad' என்ற பாட்டை பாட துவங்குவார். நல்லகண்ணு அவர்களும் இந்த பாட்டில் இருப்பார். இதன் முழு பாடலானது வரும்  22ஆம் தேதி வெளியாகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்