முகப்புகோலிவுட்

நிற அரசியலைப் பேசும் புதுப்படம்..? வைரலாகும் மஞ்ச சட்ட பச்ச சட்ட டீஸர்..!

  | February 12, 2020 15:27 IST
Manja Satta Pacha Satta

‘ஜோக்கர்’ படக் கதாநாயகன் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது.

‘ஜோக்கர்' படக் கதாநாயகன் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது.

குரு சோமசுந்தரம் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட' . இப்படத்தை தம்பகுட்டி பம்புரோஸ்கி எழுதி இயக்கியுள்ளார். ‘சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்' பேனரின் கீழ் சின்னசாமி மௌனகுரு இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்துக்கு ‘ரேனிகுண்டா' புகழ் கனேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.

இப்படம் ‘Neo-Burlesque' எனும் எள்ளி நகையாடும் நாடக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது “இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் மிக சீரியஸாக செய்யும் செயல்கள் நமக்கு மிகவும் கேளிக்கையாக பிரதிபலிக்கும்” என இப்படத்தின் இயக்குனர் தம்பகுட்டி சமீபத்தில் கூறியிருந்தார். இப்படத்தின் மற்ற இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களில் ஆதித்ய வர்மன் மற்றும் ரேணு சவுந்தர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் நேற்று வெளியானது. இப்படத்தில் நிற அரசியல் பேசப்பட்டுள்லதாகக் கூறப்படுகிறது. இந்த சுவாரஸ்யமான டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்