முகப்புகோலிவுட்

நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர் ஆஜராகவேண்டுமென நீதிபதி உத்தரவு!

  | October 21, 2019 11:58 IST
Shankar

கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார்

கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு. 

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகபிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் "எந்திரன்". நடிகர் ரஜினிகாந்த், இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற இப்படம் வர்த்தக ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. உலகம் முழுவதி உள்ள ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்  ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1996 - ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் 'ஜூகிபா' என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார். எனவே தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்நிலையில் இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com