முகப்புகோலிவுட்

சசிகுமார், சமுத்திரகனியுடன் கூட்டு சேறும் ஜோதிகா!

  | August 06, 2019 16:49 IST
Sasikumar

துனுக்குகள்

  • ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜாக்பாட்
  • இரா.சரவணன் இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்
  • இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி இருவரும் நடிக்கவிருக்கிறார்கள்
திருமணத்துக்கு பின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்', ‘செக்கச்சிவந்த வானம்', ‘காற்றின் மொழி', உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த வருடம் வெளியான ‘ராட்சசி' படத்திற்கும் நல்ல வரவேற்பு. காமெடியை மைய்யப்படுத்தி தற்போது வெளியாகி இருக்கும், ‘ஜாக்பாட்'படம் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகிறார்கள்.
 
இதை தொடர்ந்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் பிரட்ரிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்' என இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.‘கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்